மாஸ்டர் திரைப்படம் OTT-யிலா ?அதிர்ச்சியில் ரசிகர்கள்!
மாஸ்டர் திரைப்படம் OTT: விஜய் நடிப்பில் வெளியாக உள்ள மாஸ்டர் திரைப்படம் போட்டியில் வெளிவருமா என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். ஆனால் அதன் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் திரைப்படம்(Master Film OTT) கண்டிப்பாக திரையரங்கில் தான் வெளியிடப்படும் என்று கூறியுள்ளார். இதனிடையே திரைப்படம் வட்டாரங்கள் கூறுகையில் மாஸ்டர் திரைப்படம் OTT வெளியிடுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறுகின்றனர்.
கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதன் காரணமாக திரையரங்குகளில் படம் வெளியாகாமல் இருந்தது. ஊரடங்கு காரணமாக எந்த ஒரு திரைப்படமும் திரை அரங்குகளில் வெளியாகவில்லை. சிறு மற்றும் பெரிய பட்ஜெட்டில் உருவான எந்த திரைப்படமும் திரையரங்குகளில் வெளியாகவில்லை.
முக்கியமாக மாஸ்டர் திரைப்படம்(Master Film OTT) அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு திரைப்படமாக இருந்தது. விஜய் ரசிகர்கள் மாற்ற திரைப்படத்திற்காக மிகவும் ஆவலாக இருந்தனர்.
இளையதளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் திரைப்படம் மாஸ்டர். இதனை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன்பாக இயக்கி வெளிவந்த “கைதி” திரைப்படம் அனைவராலும் பாராட்டப்பட்டது. எனவே மாஸ்டர் திரைப்படத்தின் மீது விஜய் மட்டும் விஜய் சேதுபதி ரசிகர்கள் அதித ஆர்வம் கொண்டனர்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் கூறும்பொழுது மாஸ்டர் திரைப்படத்தில்(Master Film OTT) விஜய்யின் வேறு பரிமாணத்தை நீங்கள் காண்பீர்கள் என்று விஜய் ரசிகர்களிடம் அவர் கூறினார். இதனால் விஜய் ரசிகர்கள் அதிக உற்சாகம் கொண்டனர்.
கொரோனா பாதிப்பு மீண்டும் தொடங்கி இருப்பதன் காரணமாக தியேட்டர்கள் திறப்பது மீண்டும் காலம் காலதாமதமாக வாய்ப்பு உள்ளது. இதனால் மாஸ்டர் திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் மாஸ்டர் திரைப்படத்தை திரையரங்கில் வெளியிடுவதற்கு முன்பாகவே OTT-யில் வெளியிடுவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர்.
சமீபகாலமாக அனைத்து திரைப்படங்களும் OTT-யில் வெளியாகின்றன. குறிப்பாக சூர்யா நடித்து வெளிவந்த சூரரைப்போற்று படம் கூட OTT இல் தான் வெளியானது. எனவே மாஸ்டர் திரைப்படத்தின் தயாரிப்பாளர்களும் மாஸ்டர் திரைப்படத்தை OTT-இல்(Master Film OTT) வெளியிட திட்டமிட்டுள்ளனர் என திரைப்பட வட்டாரங்கள் கூறுகின்றன. ஆனால் சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் கூறும்பொழுது கூட மாஸ்டர் திரைப்படம் முதலில் திரையரங்கில் தான் வெளியிடப்படும் அதன்பிறகே OTT-யில் வெளியாகும் எனக் கூறினார். இந்த செய்தியை கேட்ட பின்னரே விஜய் ரசிகர்கள் சமாதானம் அடைந்தனர்.